அனைத்து மொழிகளிலும் நீட் தேர்வு நடத்துவது ஏன்? – அன்புமணி ராமதாஸ்

289

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை அண்ணா கலையரங்கத்தில் பாமக இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ் படித்தவர்கள் மருத்துவம் படிக்க முடியாதா? பின் அனைத்து மொழிகளிலும் நீட் தேர்வு நடத்துவது ஏன்? என சரமாரி கேள்வி எழுப்பினார். கல்வி வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று கூறிய அவர், தமிழக அரசு தவறும் பட்சத்தில் ஆட்சியை இழக்க நேரிடும் என்று தெரிவித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டபின், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.