மலைகளில் உள்ள தாதுக்களை வெட்டி எடுக்கவே பசுமை சாலை திட்டம் – பா.ம.க. இளைஞரணி தலைவருமான அன்புமணி

427

சிலை கடத்தலில் பல அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதால்தான் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க. இளைஞரணி தலைவருமான அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ம.க.வின் 30ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கே.கே. நகரில் அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்த அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மலைகளில் உள்ள தாதுக்களை வெட்டி எடுப்பதற்காகவே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறினார். பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் எப்போது வேண்டுமானாலும் விவாதம் நடத்த தயார் என்றும் அன்புமணி தெரிவித்தார்.