ஜாமீன் மனுவை திரும்பப் பெற்ற பைனான்சியர் அன்புச்செழியன், சரணடைய வாய்ப்புள்ளதாக தகவல் …!

564

பைனான்சியர் அன்புச்செழியனின் ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அவர் விரைவில் சரணடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கந்துவட்டி கொடுமையால் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவானார். இந்நிலையில் தனிப்படை அமைத்து அவரை தேடி வரும் காவல்துறையினர் , அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர் . மேலும் இவ்வழக்கு தொடர்பாக பைனான்சியர் அன்புச்செழியனின் மேலாளர் முருகன் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை பைனான்சியர் அன்புச்செழியன் திரும்ப பெறுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றதால் அன்புச்செழியன் விரைவில் சரணடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.