மாயாவதியின் தம்பி அனந்தகுமார் மீது பண மோசடி புகார் | ரூ. 1,316 கோடி குவித்ததாக குற்றச்சாட்டு !

172

பல்வேறு நிறுவனங்களை நடத்துவதாக கூறி மோசடி செய்து ஆயிரத்து 316 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்து விட்டதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் தம்பி அனந்தகுமார் மீது குற்றச்சாட்டு ழுந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. . இத்தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் குடும்ப குழப்பத்தாலும், கோஷ்டி பூசலாலும் சமாஜ்வாடி கட்சி திணறுகிறது. இதனிடையே, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க முற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 2007 முதல் 2012 வரை உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி இருந்தார். அப்போது, மாயாவதியின் தம்பி அனந்தகுமாரின் சொத்து மதிப்பு ஏழரை கோடியில் இருந்து ஆயிரத்து 316 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 200 மடங்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. பொருளாதார முறைகேடுகளை ஆதரித்ததன் மூலம், இந்த பணத்தை குவித்ததாக கூறப்படுகிறது. எனவே, அனந்த குமார் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.