திப்பு சுல்தான் ஒரு கொடுங்கோலன் என மத்திய இணையமைச்சர் அனந்த குமார் ஹெக்டே கருத்து …!

565

திப்பு சுல்தான் ஒரு கொடுங்கோலன் என கர்நாடக அரசிற்கு மத்திய இணையமைச்சர் அனந்த குமார் ஹெக்டே கடிதம் எழுதி இருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
மைசூர் மன்னரான திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழா நவம்பர் 10-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் மத்திய திறன் மேம்பாடு இணையமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே, கர்நாடக தலைமை செயலர், உத்தர கன்னட துணை கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், நவம்பர் 10ம் தேதி நடக்கும் திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்ட விழாக்களில் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொடூர கொலைகாரர், மோசமான, வெறித்தனமான கற்பழிப்புவாதியை பெருமைப்படுத்தும் அவமானகரமான விழாவிற்கு அழைக்க வேண்டாம் என கர்நாடக அரசிடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.