இன்று 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் | தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரிக்கை

395

தமிழகத்தில் சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 3 மணிவரை மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்திலேயே நேற்று அதிக பட்சமாக திருத்தணியில் நேற்று 111 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதே போல், சென்னை, கரூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் நேற்று வெப்பநிலை 107 டிகிரி மேல் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், 18 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை இயக்குநர் லதா அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவையின்றி பகல் 12 மணி முதல் 3 மணிவரை பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.