மாயமான ஏ.என்.32 விமானத்தை தேடும் பணி கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் தொடங்கியது.! விபத்துக்குள்ளான விமானத்தில் பலியானவர்கள் பெயர் பட்டியல்!

288

மாயமான ஏ.என்.32 விமானத்தை தேடும் பணி கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் தொடங்கியது.
சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட கடற்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமானது. மாயமான விமானத்தை 5 நாட்களாக தேடியும் விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை, இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாயமான விமானத்தை கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் சஜ்ஜாத் ஆபரேஷன் என்ற பெயரில் தேடும் பணி தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் குழுமத்திற்கு சொந்தமான 4 அதிவிரைவு படகுகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நெல்லை கூடங்குளத்தில் இருந்து நீரோடி வரை உள்ள கடல் பகுதிகளில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் விமானத்தின் பாகங்கள் ஏதேனும் தெரிந்தால் காடலோர காவல் படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விபத்துக்குள்ளான விமானத்தில்
பலியானவர்கள் பெயர் பட்டியல்!

சென்னையில் அந்தமான் நோக்கி சென்ற ஏ.என்-32 போர் விமானத்தில் பயணித்த 29 பேரின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.அதன் விபரம்:1.பட்சாரா(கேப்டன்)
2.பி.கே.நந்தால்(துணை கேப்டன்)
3.குணால் பார்பேட்டி
4.ரஞ்சன்(பொறியாளர்)
5.ஜி.சவுத்ரி
6.கபில்
7.தீபிகா
8.பி.சந்த்
9.முகேஷ்தாகூர்
10.அகிலேஷ்
11.பிபின்குமார்
12.எல்.கே.திரிபாதி
13.ரகுவீர் வர்மா
14.நவ்ஜோத் சிங்
15.ரவிதேவ் சிங்
16.சி.எஸ்.யாதவ்
17.ஏக்நாத் தாக்
18.ஜின்சா ஷியாம்
19.விமல்
20.பிரசாத் பாபு
21.பூர்ண சந்திரா
22.சந்திரன் மகாராணா
23.சின்ன ராவ்
24.சீனிசாமி ராவ்
25.சம்பத் மூர்த்தி
26.பூபிந்தர் சிங்
27.நாகேந்திர ராவ்
28. சஜீவ் குமார்
29.முத்துகிருஷ்ணன்(தமிழ்நாட்டை சேர்ந்தவர்)