பிறந்து 5 வாரங்களேயான, அரிய வகை 2 அமுர் சிறுத்தை புலிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ முதன்முறையாக வெளியிடப்பட்டன.

392

பிறந்து 5 வாரங்களேயான, அரிய வகை 2 அமுர் சிறுத்தை புலிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ முதன்முறையாக வெளியிடப்பட்டன.

இங்கிலாந்து நாட்டின் ட்வைக்ராஸ் வனவிலங்கு பூங்காவில், உலகில் மிக அரிதான வகையை சேர்ந்த 2 அமுர் சிறுத்தை புலி குட்டிகள் 5 வாரங்களுக்கு முன்பு பிறந்தன.
இந்த குட்டிகளின் பெற்றோர் கிறிஸ்டின் மற்றும் டேவிட் ஆஃப். இந்த குட்டிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ட்வைக்ராஸ் பூங்கா முதன்முறையாக வெளியிட்டுள்ளது. அரிதாகிவரும் அமுர் சிறுத்தை வகைகள், உலகம் முழுவதும் உள்ள வனவிலங்கு பூங்காக்களில் மொத்தம் 200 என்ற எண்ணிக்கையிலே உள்ளன.
வாழ்விடம் இழப்பு, இறைச்சிக்காக வேட்டையாட படுதல், நோய்கள், ரோமங்களுக்காக கொல்லப்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வனவிலங்குகள் அழிக்கப்படுகின்றன.
ட்வைக்ராஸ் பூங்கா நிர்வாகம் பல நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து, வனவிலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
ரஷிய அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு, அமர் சிறுத்தை புலிகளை பாதுகாக்க திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.