விரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..!

276

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலராக டிடிவி தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலராக இருந்த டிடிவி தினகரன் அக்கட்சியின் புதிய பொதுச் செயலராக பதவியேற்றார். சென்னை அசோக் நகரில் உள்ள அமமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலராக டிடிவி தினகரன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். அமைப்பாக உள்ள அமமுக, கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.