அமமுகவுக்கான செல்வாக்கு போகப்போகத் தெரியும் – டிடிவி தினகரன்

295

தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய நிலவரப்படி தங்களுக்கு வந்த தகவலின்படி குறைந்தது 300 வாக்குச் சாவடிகளில் அமமுகவிற்கு எந்தவிதமான வாக்குகளும் பதிவாகவில்லை எனவும், வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை என போகப்போக தெரியும் எனவும் கூறினார்.