சென்னையில் அம்மா உணவகங்களில் 32 கோடி இட்லிகள் விற்பனை!

257

சென்னை, ஆக.6–
சென்னையில் அம்மா உணவகங்களில் ௩௧.௮௧ கோடி இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது:–
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ௨௯௩ அம்மா உணவகங்களும், மாநகரிலுள்ள அரசு மருத்துவமனையில் 7 அம்மா உணவங்களும் மொத்தம் 300 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 18–ம் தேதி வரையில் 31.81 கோடி இட்லிகளும், 12.49 கோடி பலவகை சாதங்களும், 15.27 கோடி சப்பாத்திகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் சுத்திகரிப்பட்ட குடிநீர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஜூலை 18–ஆம் தேதி வரை சராசரியாக 11 ஆயிரம் குடும்பங்கள் 1.73 கோடி லிட்டர் குடிநீரை இலவசமாகப் பெற்றுள்ளனர். மேலும், 30 குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்க இடங்கள் கண்டறியப்பட்டுள்ள அவர் கூறினார்.