பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘அம்மா பேட்ரோல்’ எனும் புதிய ரோந்து வாகனம் விரைவில் அறிமுகம்

203

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘அம்மா பேட்ரோல்’ எனும் புதிய ரோந்து வாகனம் விரைவில் அறிமுகமாகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெருகிவரும் சூழலில் தமிழகத்தில் ஏடிஜிபி தலைமையில் தனியான குற்றத்தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு என பிரத்யேகமாக ரோந்து வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோந்து வாகனத்தில் குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1098, மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1091 என்ற எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சென்னை காவல்துறையினர் அம்மா பேட்ரோல் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக சென்னையில் 35 காவல் நிலையங்களுக்கு இந்த அம்மா பேட்ரோல் ரோந்து வாகனம் வழங்கப்படுகிறது.