அமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

175

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைமையில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ள நிலையில், நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க, தலைவர் அமித்ஷா விருந்தளிக்கிறார்.மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் 23 ஆம் தேதியன்று வெளியாக உள்ள நிலையில், பா.ஜ.க, தலைமையிலான கட்சிகளுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.ஊடகங்களின் கருத்து கணிப்புகளை பொறுத்தவரை, அனைத்தும் ஒரே குரலில் மோடி தலைமையிலான ஆட்சியே மீண்டும் வரும் என்று தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடந்தால், காங்கிரஸ் அல்லாத கூட்டணி 2 வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை புரியும்.
கடந்த 2014 ல், நாடு முழுவதும் மோடி அலை இருந்தது. அதன் காரணமாக பா.ஜ.க, தனிப்பெரும்பான்மை பெற்றது. எனினும், அதன் தலைமையில் கூட்டணி ஆட்சியே அமைந்தது.

இந்தநிலையில், தேர்தலுக்கு முன்னதாக அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அளிக்க உள்ள விருந்து முக்கியத்துவம் பெறுகிறது. இதனிடையே பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டமும் நாளை நடைபெற உள்ளது.