அமித்ஷா என்ன கடவுளா? அவரை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூடாதா? – மம்தா ஆவேசமாக கேள்வி

95

அமித்ஷா என்ன கடவுளா? அவருக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாதா? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் மோதல் நடைபெற்ற இடங்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் பற்றி அமித்ஷாவுக்கு தெரியுமா? எத்தனை பிரபலமானவர்கள் இங்கு படித்தார்கள் என அமித்ஷாவுக்கு புரியுமா? என சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, இதுபோன்ற தாக்குதல் நடத்தியதற்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யாரும் எதிர்த்து போராடக்கூடாது என்று சொல்வதற்கு அமித்ஷா என்ன கடவுளா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட குண்டர்களால் இந்த வன்முறை நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.