இந்திய அணி வெற்றிக்கு சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்த அமித்ஷா..!

189

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை, இந்தியா வீழ்த்தியது மூலம் மேலும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல் நிகழ்தப்பட்டு இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும், இது அனைவருக்கமான கவுரவம் எனவும் தெரிவித்தார். அமித்ஷாவிம் இந்த கருத்து கிரிக்கெட்டை அரசியலாக்குவதாக கூறி, கண்டனங்கள் எழுந்துள்ளன.