ஒரு வங்க தேசத்தவரை கூட இனி இந்தியாவில் வசிக்க அனுமதிக்கமாட்டோம் – தேசிய தலைவர் அமித் ஷா

470

ஊடுருவியிருக்கும் ஒரு வங்க தேசத்தவரை கூட இனி இந்தியாவில் வசிக்க அனுமதிக்கமாட்டோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் குறித்து உரையாற்றிய அவர், வாக்கு வங்கியை பற்றி கவலைப்படுபவர்கள் தான் மனித உரிமைகளை பற்றி பேசி வருவதாக கூறினார். அவர்கள் நாட்டின் நலனை பற்றியும் ஏழைகளை பற்றியும் எண்ணிப்பார்ப்பது இல்லை என்று கூறிய அமித் ஷா, ஊடுருவியிருக்கும் ஒரு வங்க தேசத்தவரை கூட இனி இந்தியாவில் வசிக்க அனுமதிக்கமாட்டோம் என சூளுரைத்தார்.

அதேசமயம் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் வங்க தேசத்தவர்கள் குறித்து கவலைப்படும் மம்தா பானர்ஜி, இந்தியர்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும் அவர் சாடினார். இந்தநிலையில், எதிர்வரும் மூன்று மாநில சட்டபேரவைகளுக்கான தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற கனவை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமித் ஷா விமர்சித்துள்ளார்.