இந்தியா-பாகிஸ்தான் பிரிவிணைக்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு..!

162

இந்தியா-பாகிஸ்தான் பிரிவிணைக்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் நினைவு கருத்தரங்கில் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்கு முன்பு ஆட்சி அமைத்த காங்கிரஸ் ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை சமாதானப்படுத்துவதற்காக வந்தே மாதரத்தில் முதல் இரண்டு சரணங்களை மட்டும் தேசிய பாடலாக ஏற்றுக்கொண்டு மீதமுள்ள வரிகளை புறக்கணித்ததாக சுட்டிக் காட்டினார். இதற்கு மதச்சாயம் பூசியதன் மூலம் காங்கிரஸ் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாக கூறிய அமித் ஷா, திருப்திப்படுத்தும் அரசியலில் வீழ்ந்த காங்கிரஸ் கட்சியே இந்தியா-பாகிஸ்தான் பிரிவிணைக்கு பொறுப்பு என குற்றம்சாட்டியுள்ளார்.