வரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் – தேசிய தலைவர் அமித் ஷா

242

வருகின்ற எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தேர்தல் வரும்போதெல்லாம் எதிர்கட்சிகள் அவதூறு பரப்புவதை கொள்கையாக கொண்டுள்ளனர் என்றார். மாட்டிறைச்சி விவகாரத்தில் பா.ஜ.க மீது அவதூறு பரப்பி வருவதாக கூறிய அமித்ஷா, எதிர்கட்சிகளின் இத்தகைய முயற்சியை முறியடித்து வரும் தேர்தல்களில் பா.ஜ.க அபார வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கி குறித்தே கவலை இருப்பதாகவும், நாட்டைப்பற்றிய கவலை இல்லை என சாடினார். அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும், குண்டு வெடிப்புகளும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமித்ஷா, மனித உரிமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டினார்.