சோழக்காட்டு பொம்மைகளாக பயன்படுத்தபடும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் கட்அவுட்டுகள்..!

206

கர்நாடகாவில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் கட் அவுட்டுகளை பறவைகளை பயமுறுத்தும் சோழக்காட்டு பொம்மைகளாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு
பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகும் சிக்மகளூர் மாவட்டத்தில் மோடி, அமித்ஷா ஆகியோரது கட் அவுட்டுகள் அகற்றப்படாமல் இருந்துள்ளன. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மோடி, அமித்ஷாவின் கட் அவுட்டுகளை சேகரித்து, அவற்றை தங்கள் நிலங்களில் பறவைகளை பயமுறுத்தும் சோழக்காட்டு பொம்மைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.