மாதா அமிர்தானந்தமாயி மடத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கேரளா செல்கிறார் !

298

மாதா அமிர்தானந்தமாயி மடத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கேரளா செல்ல உள்ளார்.
பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படும் அமிர்தானந்தமாயி 64வது பிறந்தநாளையொட்டி கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமாயி மடத்தில் இன்று காலை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள மாநிலத்துக்கு இன்று செல்ல உள்ளார். திருவனந்தபுரம் விமானப்படை திடலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்கின்றனர். அமிர்தானந்தமாயி மட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பிற்பகல் அவர் டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.