அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

401

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல் போட்ரா 7க்கு 5, 3க்கு6, 7க்கு6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.