விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..!

80

அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த பெண் என்ற பெருமையை, அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டீனா கூக் படைக்க உள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, வழக்கமாக ஒரு பெண் வீராங்கனை உட்பட 3 பேர் அனுப்பப்படுவார்கள். அந்த வகையில், ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜூலை மாதம் 20-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ளனர். அவர்கள் அனைவரும் 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்க உள்ளார். இதற்கு முன்னதாக, அமெரிக்க வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.