அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய மகன் வீட்டில் தாயை எலும்புக்கூடாக கண்டதால் அதிர்ச்சி

570

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் மூதாட்டி ஒருவர், அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவரது மகன் எதிரே, உடல் முழுவதும் மக்கிப்போன நிலையில், எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவரை இழந்த ஆஷா சகானி என்ற 63 வயது மூதாட்டி வசித்து வருகிறார். அவரது மகன் ரிதுராஜ் என்பவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய ரிதுராஜ், தனது வீட்டிற்கு சென்று பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. பல மணிநேர போராட்டத்திற்குப்பின் கதவை திறந்து பார்த்தபோது,
வீட்டிற்குள் தனது தாய் எலும்புக் கூடாக கிடப்பதை கண்ட ரிதுராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீஸார், முற்றிலும் மக்கிப் போகி எலும்புக் கூடாக இருந்த ஆஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மூதாட்டி ஆஷாவின் மரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.