அமெரிக்காவின் வடமேற்கு கடல் பகுதியில் வலையில் சிக்கிய தாய் மற்றும் குட்டி திமிங்கலம் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு..!

848

அமெரிக்காவின் வடமேற்கு கடல் பகுதியில் வலையில் சிக்கிய 2 திமிங்கலங்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையில் 2 திமிங்கலங்கள் சிக்கின. இதனையடுத்து கடலோர காவல் படைக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் வலையில் மாட்டிய 2 திமிங்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் வலையில் சிக்கிய தாய் மற்றும் குட்டித் திமிங்கலம் வலையில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட திமிங்கலம் கடலில் 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் திமிங்கலங்கள், டால்பின்கள் இது போன்று வலைகளில் சிக்கி உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.