சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்

மேல் சிகிச்சைக்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்ல உள்ளார்.

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதனிடையே சிறுநீரகம், தைராய்டு தொந்தரவுகளும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக விஜயகாந்த் இன்று விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு பிரபலமான மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதனையடுத்து அவர் சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைமை, விஜயகாந்தை வழி அனுப்ப யாரும் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.