அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடைபெற்ற இடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்!

333

அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடைபெற்ற இடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 400 பேர் படுகாயமடைந்தனர்.
லாஸ்வேகாஸ் நகரில் உள்ள மண்டாலே பே காசினோ நட்சத்திர விடுதியில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்தபடி சிதறி ஓடினர். இதனால், இசைக்கச்சேரி நடைபெற்ற இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. துப்பாக்கிச் சூட்டில் இருபது பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாக்குதலை ஒருவர் நடத்தினாரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நடத்தினரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லாஸ்வேகாஸ் நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் விமானங்களின் வருகையும், புறப்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.