அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 60 அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது..!

1519

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 60 அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.பிரிட்டனில் தங்கியிருந்த ஒய்வு பெற்ற ரஷ்ய உளவாளி செர்கெய் மற்றும் அவரது மகள் மீது, லண்டன் நகரின் பொது இடத்தில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ரஷ்ய அரசே காரணம் என குற்றம்சாட்டிய பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் 60 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 60 அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் ரஷ்யாவில் இருந்து வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.