மிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி !

265

அமெரிக்காவில் மிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இடாஹோ மாகாணத்தில் உள்ள போய்ஸ் என்ற இடத்தில், கடந்த 2012-ம் ஆண்டு மிகப்பெரிய உருளைக்கிழக்கு விளைவிக்கப்பட்டது. 28 அடி நீளம், 12 அடி அகலம், 12 அடி உயரத்திற்கு காணப்படும் இந்த உருளைக்கிழங்கின் எடை 6 டன் ஆகும். தற்போது இந்த உருளைக்கிழங்கு, இரு படுக்கை வசதி கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. உருளைக் கிழங்கின் உள்ளேயே குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு, இந்திய மதிப்பில் 14 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே, உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.