அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

1200

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2 வது சுற்றில், ஐந்து முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரரும் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பைரேவும் மோதினர். இதில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் 7க்கு 5, 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.