அமெரிக்காவில் முற்றிலும் சிதைந்த முகம் கொண்ட இளைஞருக்கு வெற்றிகரமாக அழகான முகம் மாற்றப்பட்டது.

355

அமெரிக்காவில் முற்றிலும் சிதைந்த முகம் கொண்ட இளைஞருக்கு வெற்றிகரமாக அழகான முகம் மாற்றப்பட்டது.
அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணம் வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ். கடந்த 2006-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றபோது இவரது முகம் சிதைந்து விட்டது. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த இவர் மகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள திட்டமிட்டார். இதையடுத்து அண்மையில் தற்கொலை செய்து கொண்ட காலன் ரோஸ் என்பவரது முகம் தானமாக பெறப்பட்டு முகமாற்று அறுவை சிகிச்சையை முகசீரமைப்பு சிறப்பு மருத்துவர் சமீர் மார்தானி செய்து முடித்தார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து 3 வாரங்கள் கழித்து கண்ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தை பார்த்தார். அப்போது தனது முகம் முழுவதும் அழகாக மாறி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.