35 அமெரிக்க மாலுமிகளின் 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து-உயர்நீதிமன்ற மதுரை கிளை!

286

தூத்துக்குடி கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாலுமிகள் 35 பேரின் சிறை தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டு பயங்கர ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் ஒன்று தூத்துக்குடி கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது. எல்லை தாண்டி வந்த இந்தக் கப்பலில் இருந்த பயங்கர ஆயுதங்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கப்பல் கேப்டன் டுட்னிக் வாலன்டைன் உள்பட 35 பேருக்கு, தூத்துக்குடி நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமெரிக்க மாலுமிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், அமெரிக்க மாலுமிகள் 35 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்த அவர்கள், அந்தத் தொகையை உடனடியாக திருப்பி வழங்கவும் உத்தரவிட்டனர்.