அமெரிக்காவின் மேற்கு பகுதியான, விர்ஜினியா மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 23 பேர் பலியாகியுள்ளனர்.

184

மலைகள் சூழ்ந்த விர்ஜினியா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள்ளும் புகுந்தது.

குறிப்பாக, இங்குள்ள எல்க் ஆற்றின் நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலத்தின் கிரீன்பிரியர் பகுதியில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்ததால், சுமார் எட்டு முதல் பத்து அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் மழைசார்ந்த விபத்துகளில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.