ஜெருசலேத்தை அங்கீகரித்த அமெரிக்காவிற்கு பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு!

773

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தது குறித்து விவாதிக்க, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது.
பாலஸ்தீனத்திடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக ஜெருசலேத்தை சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இந்நிலையில் ஜெருசலேத்தை இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு பிரிட்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது. நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த அவசர கூட்டத்தில் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 15 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.