ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தோல்வி

196

ஈரானை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் பாட்ரிக் சனாகன் மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரானின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த 1000 இராணுவ குழுக்களை அனுப்ப போவதாக தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ரௌஹானி அமெரிக்கா உலகநாடுகளிலிருந்து ஈரானை தனிமைபடுத்தும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாகவும்,அதன் வெளிப்பாடே ராணுவ படைகளை அதிகரிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.