அமெரிக்காவில் உறைந்த நீர் தேக்கத்தில் மீன் ஒன்றை பூனை பிடிக்கப்படும் பாடு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது..!

845

அமெரிக்காவில் உறைந்த நீர் தேக்கத்தில் மீன் ஒன்றை பூனை பிடிக்கப்படும் பாடு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள நீர் தேக்கம் ஒன்று கடும் பனியால் உறைந்து காணப்படுகிறது. இருப்பினும் நீர் தேக்கத்தில் மீன்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றன. அந்த நீர் தேக்கத்தின் மீது நடந்து சென்ற பூனை, மீன் ஒன்றை பிடிக்க முயன்றுள்ளது. உறைந்த நீர் கண்ணாடி போல் காட்சியளித்தாலும் சற்று வலுவாக உறைந்திருந்ததால் அதிவேகமாக செயல்பட்ட பூனைக்கு துரதிஷ்டவசமாக அந்த மீன் உணவாகவில்லை. இந்நிலையில் அந்த பூனையின் அதித முயற்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக பரவி வருகிறது.