பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்தை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை

323

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்தை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருவதாக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தான் நாட்டு அரசிடம் பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க தேவையான நடவடிக்கையின் ஈடுபடுமாறு ஏற்கனவே வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். பயங்கரவாத இயக்கங்களை தடுக்காவிட்டால் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். டில்லர்சன் சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.