போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழிப்போம் என அமெரிக்கா எச்சரிக்கை..!

790

போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழிப்போம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமெரிக்கா முழுவதையும் தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே மற்றும் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே , அனைத்து நாடுகளும் வட கொரியாவுடனான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பதற்றமான சூழ்நிலையில் போர் மூண்டால் வட கொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.