அமெரிக்காவில் 75 அடி உயரமுடைய கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கம்!

635

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
நியூயார்க் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். 75 அடி உயரம் உடைய இந்த கிறிஸ்துமஸ் மரம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.