இந்தியா, அமெரிக்க அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை..!

1553

டெல்லியில் அமெரிக்க அமைச்சர்களுடன் இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தியா மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் முதல் முறையாக சந்தித்து பேசுகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்ப்பே ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தியத் தரப்பில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர் இதில், இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தும் வருகின்றனர். முன்னதாக டெல்லி விமான நிலையம் வந்தவர்களை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.