அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தவுடன் அஞ்சலி..!

725

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், நிர்வாகிகள், குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினர் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் தங்கி சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார். பின்னர் நள்ளிரவில் கருணாநிதி நினைவிடம் சென்று தனது மனைவி பிரேமலதாவுடன் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.