சீக்கியர் மீது மர்மநபர்கள் இனவெறி தாக்குதல்..!

678

நாட்டிற்கு திரும்பி போ எனக் கூறி அமெரிக்காவில் இனவெறி அடிப்படையில் சீக்கியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 50 வயது நிரம்பிய சீக்கியர் ஒருவர் மீது 2 வெள்ளையின நபர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளியதுடன், நாட்டிற்கு திரும்பி போ என்றும் அந்த நபர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், சீக்கியரது வாகனம் மீது பெயிண்டை ஸ்பிரே செய்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த சீக்கியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, 3 லட்சம் சீக்கியர்கள் வசிக்கும் அமெரிக்காவில், 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, வாரத்திற்கு ஒரு சீக்கியர் தாக்கப்படுவதாக சீக்கியர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.