அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் பெரும் தீ விபத்து!

289

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். ice_screenshot_20171118-180722
வானளாவிய கட்டடத்தின் மீது பெரும் புகை மண்டலத்துடன் கொழுந்து விட்டு எரிந்த தீ, மளமளவென அருகில் இருந்த கட்டங்களுக்கும் பரவியது. 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடினர். அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் நான்கு பேர் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.