அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

182

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைவதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட,
முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன்
தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு 2,383 வாக்குகள் பெற வேண்டும் என்ற விதியில், நடந்து முடிந்த தேர்தல்களில் 2,842 வாக்குகள் பெற்று ஹிலாரி கிளிண்டன் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பை வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் இரு கட்சிகளும் தங்களது அதிபர் வேட்பாளரை அறிவித்துள்ளதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.