அமெரிக்காவின் அதிபராக தான் பதவி ஏற்றுக் கொண்டால், நாட்டின் அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

223

அமெரிக்காவின் அதிபராக தான் பதவி ஏற்றுக் கொண்டால், நாட்டின் அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனால் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்டன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கிளிவ்லேண்ட் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்த தேர்தலில் தான் வெற்றி பெற்று, வருகிற 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று பதவி ஏற்கும் நாளிலிருந்து, நாட்டின் சட்ட ஒழுங்கு உள்பட நல்லாட்சி நடைபெறும் எனவும், நாட்டில் அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படும் எனவும், மேலும் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.