ஆம்பூர் அருகே தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், காளிங்காபுரம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மூன்றரை வயது மகள் ராகநிஷா, தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். இவர் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வேனில் வந்துள்ளார். வீடு வந்ததும் கீழே இறங்கிய சிறுமி பள்ளி வேன் முன்பு சென்றுள்ளார். இதனை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் முன்னே செலுத்தியுள்ளார். இதில், சிறுமி வேனின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.