ஆம்புலன்ஸ் செல்வதற்காக, குடியரசு தலைவர் சென்ற வாகன அணிவகுப்பு நிறுத்திய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை, உயர் அதிகாரிகள் பாராட்டி பரிசு வழங்கினர்.

352

ஆம்புலன்ஸ் செல்வதற்காக, குடியரசு தலைவர் சென்ற வாகன அணிவகுப்பு நிறுத்திய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை, உயர் அதிகாரிகள் பாராட்டி பரிசு வழங்கினர்.
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பெங்களூரு வந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆளுநர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருந்தார். கடுமையான போக்குவரத்து நெரிசல் மிக்க, டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் போக்குவரத்துதுறை சப் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையை நோக்கி நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. குடியரசு தலைவரின் வாகன அணிவகுப்பை நிறுத்திய நிஜலிங்கப்பா, ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். இதனை தெரிந்த உயர் அதிகாரிகள் நிஜலிங்காப்பாவை பாராட்டி, பரிசு வழங்கினர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.