டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் : இன்று நாடு முழுவதும் அனுசரிப்பு

110

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பேத்கர் சிலைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.