5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் மனு..!

586

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேட்டில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிராக 5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு தொழில் அதிபர் அம்பானி வழக்கு தொடர்ந்துள்ளார்

பிரான்ஸ் நாட்டுடனான ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை எங்கள் நிறுவனத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அம்பானி தொடர்ந்துள்ள மனுவின் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.