சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் அமலாபால் கருத்து …!

431

சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக, நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை அமலாபால் போலி முகவரி மூலம் புதுச்சேரியில் சொகுசுக் காரை பதிவுசெய்து 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார் . இது குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், அமலாபால் புதுச்சேரியில் வாடகை வீட்டில் இருந்ததற்கான இருப்பிட சான்று, எல்.ஐ.சி பாலிசி ஆகியவற்றை சமர்பித்ததாகவும், இதில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை என விளக்கமளித்தார். இந்த நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த அமலா பால், தற்போது படகில் பயணம் செய்ய விரும்புவதாகவும், இது சட்ட விதிமீறலா குற்றமா? என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.