அமைச்சர் பாஸ்கர் கரூருக்கு வராவிட்டால், தனது வாக்கை வாபஸ் பெறுவேன் : செல்போன் டவர் மீது ஏறி ஓட்டுநர் ஒருவர் போராட்டம்.

803

போக்குவரத்து துறை அமைச்சர் பாஸ்கர் உடனடியாக கரூருக்கு வர வேண்டும் என வலியுறுத்தி, செல்போன் டவர் மீது ஏறி ஓட்டுநர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அருகே தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அன்பழகன். இவர் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும் எனவும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக தாந்தோன்றிமலைக்கு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற, ஓட்டுநரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அமைச்சர் வராவிட்டால், தனது வாக்கை வாபஸ் பெறுவேன் எனவும் கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.